MP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக?

0
169

MP தேர்தலில் இழந்த வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் தந்திரமாக வாங்குமா பாமக?

ஒருவழியாக புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்! தோல்வி பயம் காரணமாக வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவிடலாம் என்று கணக்கு போட்ட திமுக கடைசியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வாயிலாகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை திமுக விரும்பவில்லை என்று கண்டனம் தெரிவித்துவிட்டார்.

இருந்தபோதிலும் விடாப்பிடியாக மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது திமுக. இதிலிருந்தே தோல்வி பயம் திமுகவிற்கு உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

இது ஒருபுறம் இருந்தாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. விழுப்புரம், கடலூர், தர்மபுரி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகும். ஏழு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் வன்னியர்கள் பலமிக்க தொகுதியாகும் திண்டுக்கல் மற்றும் மத்திய சென்னை தொகுதியில் மட்டும் வன்னியர்கள் கணிசமாக உள்ளனர்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையின் காரணமாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்தது. இக்கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்ததில் இரு காரணங்கள் முக்கியமாக முன் நிற்கின்றன,. அதில் ஒன்று தலித் சமுதாயத்திற்கு எதிரான கட்சி என்ற தோற்றத்தை திமுகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்து திட்டமிட்ட விஷமப் பிரச்சாரம் காரணமாக பாமக, பெரும்பான்மையான தலித் வாக்குகளை பெற தவறிவிட்டது.

முக்கியமாக தலித் வாக்குகள் பெருமளவில் அதிமுகவிற்கு இருக்கின்றன,. ஆனால் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு 100 சதவீதத்தில் 5 சதவீதம் அதாவது 300 வாக்குகள் அதிமுகவிற்கு தலித் வாக்குகள் இருந்தால் வெறும் பதினைந்து வாக்குகள் மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமகவிற்கு விழுந்தது,. அதுமட்டுமில்லாமல் பாமகவின் தேர்தல் பிரச்சாரத்தை தலித் பகுதியில் செய்யவிடாமல் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மூலமாக ரவுடியிசம் செய்தது.

பாமக கட்சியின் வேட்பாளர்கள் அமைச்சர்களுடன் சென்று வாக்கு சேகரிக்க சென்ற போது தலித் பகுதிகளுக்குள் விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறில் ஈடுபட்டனர். இதை ஜெகத்ரட்சகனும் திருமாவளவனும் இருவரும் பேசி மகிழ்ச்சி அடைந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் மற்ற சமுதாய வாக்குகள் பெருமளவிற்கு பாமகவிற்கு விழுந்தன,. தலித் பகுதியில் மட்டும் விழாத காரணத்தினால் தான் அக்கட்சி விழுப்புரம், கடலூர்,அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி ஆகிய தொகுதிகளில் தோல்வி அடைய முக்கிய காரணம் ஆகும்.

மேலும், பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தினால் முஸ்லிம் வாக்குகள் 5சதவீதம் கூட பாமகவிற்கு விழவில்லை அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பாமகவை வீழ்த்தினார்கள் என்பது தான் உண்மை. தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பாக போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாமகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்,

பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இடங்களில் பாமக வாக்குகளை அள்ளிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே,. ஆனால் தலித் வாக்குகள் விழுவது மிகக் கடினமே என்று பாமக பிரமுகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் பட்டியல் இனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதவிகளுக்கு தலித் வேட்பாளர்கள் இம்முறை பாமகவை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அவர்களால் வெல்ல முடியும் இல்லை என்றால் திமுக எளிதாக அதிமுகவை வென்றுவிடும்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் தலித் பிரமுகர்கள் வேண்டுமென்றே வேலை செய்யாததால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று பாமகவினர் அதிமுகவிடம் குற்றச்சாட்டை வைத்தனர்,. ஆனால் தற்பொழுது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு பாமக பலம் மிக்க பகுதிகளில் வாக்கு சேகரிக்க வரும்போது அதிமுகவிற்கு போதுமான அளவு ஒத்துழைப்பு கொடுப்பார்களா என்பது சந்தேகமே?.

இந்த சூழ்நிலையில், பாமக வேட்பாளருக்கு தலித்பகுதியில் கணிசமான வாக்குகளை தலித் பிரமுகர்கள் பெற்றுத் தந்தால் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் பாமகவினர் அவர்களுக்கு வாக்குகளை வாங்கி தருவார்கள் என்பது உள்ளூர் கட்சி பிரமுகர்கள் ஆங்காங்கே பேசி வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தலித் வாக்குகளை இழந்த பாடத்தை உள்ளாட்சித் தேர்தல் மூலம் பாமகவினர் தந்திரமாக பெற்றால் மட்டுமே உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடங்களில் பாமக வெற்றி பெறும் என்பதே உண்மை.

Previous articleஇன்று முதல் வலிமை, தலைவர் 168 படப்பிடிப்புகள் தொடக்கம்: ரஜினி அஜீத் சந்திப்பா?
Next articleஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது! இராமதாஸ் வெறித்தன பதிலடி