பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்

Photo of author

By Rupa

பாமக யோசனை செயல்திட்டமாக மாறியுள்ளது! திமுகவை பாராட்டி அன்புமணியின் ட்வீட்!

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் சட்டம் திருத்தம் செய்வதாக கூட்டுத்தொடர் ஆரம்பித்த போதே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தற்போது அதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநில அரசு நியமிக்கும் என சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கும் வகையில் பாஜக மற்றும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின் இது குறித்து பேசிய முதல்வர், கர்நாடகா குஜராத் போன்ற பல மாநிலங்களில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வு செய்வது குறித்து மாநில அரசின் ஒப்புதல் கேட்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் கடந்த நான்கு வருடங்களாக மாநில அரசின் ஒப்புதல் எதுவும் கேட்கப்படவில்லை.

பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரும் துணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளார். அவ்வாறு இருக்கையில் முடிவுகள் எடுக்கும் நிலையில் இணைவேந்தர் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் தற்போது வரை அதற்கு இடம் தரவில்லை. தனக்கு மட்டுமே கிடைத்த அதிகாரம் என்பது போல் நடந்து கொண்டு வருகிறார். இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி என்பதற்கு பெரும் சிக்கலாக அமைகிறது. இவ்வாறு ஆளுநரே வேந்தர்களில் தேர்வு செய்வதால் பல்கலைக்கழகங்களில் பல குளறுபடிகள் நடக்கின்றது. பிரதமரின் ஆட்சிக்கு உட்பட்ட குஜராத் மாநிலமும் மாநில அரசின் ஒப்புதல் பெற்று பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வு செய்கின்றனர்.

அவ்வாறு இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் பாஜகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கேள்வி எழுப்பினார். இவ்வாறு இருக்கையில் இன்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் என்ற சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் தேவையற்ற இடையூறுகளைத் தவிர்க்க துணைவேந்தர்களை மாநில அரசு தேர்வு செய்ய வேண்டும் என்று பாமக பலமுறை வலியுறுத்தி வந்தது. பாமக கட்சியின் யோசனை தற்பொழுது செயல்திட்டம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.