PMK: பாமக கட்சிக்குள் அதிகாரம் மோதல் போக்கானது தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று நடந்து முடிந்த ராமதாஸின் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புக்கள் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்புகளால் அன்புமணி பதவியிலிருந்தும் எந்த பலனும் இல்லை. நேற்று நடைபெற்ற பொதுக்குழு மேடையில் ராமதாஸின் வலது பக்கத்தில் அவரது மகளுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் அந்த இடத்திற்கு அன்புமணி தான் வருவார்.
ஆனால் அவர் எப்படி தனது மகள்களை வைத்து கட்சியை செயல்படுத்துகிறாரோ அதேபோல ராமதாஸ் தனது மகளை வைத்து காய் நகர்த்துகிறார். அதுமட்டுமின்றி அன்புமணி நியமித்த நிர்வாகிகள் அவரது அறிவிப்பு என எதுவும் செல்லாது என இந்த பொதுக்குழு மூலம் வெளிப்படையாக சொல்லாமல் தெரிவித்துள்ளனர். அதேபோல வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து முடிவுகளையும் ராமதாஸ் தான் எடுப்பார் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
மேலும் கட்சி நிறுவனர் தலைவர் என ராமதாஸ் அவர்களே தொடர்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் தலைவருக்கு எதிராக அன்புமணி பேசிய பொய்கள் அனைத்தையும் கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கௌரவத் தலைவர் ஜி கே மணி கேட்டுக்கொண்டார். இவ்வாறு பல தீர்மானங்களை வைத்து பார்க்கையில் நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தின் மூலம் அன்புமணிக்கு இனி கட்சிக்குள் எந்த ஒரு பவரும் இல்லை என்பது தெள்ளந் தெளிவாகத் தெரிகிறது.