பாமக வின் முக்கிய நிர்வாகிக்கு திடீர் நெஞ்சுவலி.. கட்சிக்குள் தொடர் பரபரப்பு!!

0
20
Bamaka's main administrator has sudden chest pain.. Continual agitation within the party
Bamaka's main administrator has sudden chest pain.. Continual agitation within the party

PMK: பாமகவின் அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் தலைவர் பதவிக்காக போட்டி போட்டுக் கொள்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு ராமதாஸ், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்து பொறுப்புகளையும் அன்புமணி தான் ஏற்க போகிறார் எனக் கூறிய மறுநாளே நான் தான் சாகும் வரை தலைவர் என்று நிலை தடுமாறி மாற்றி பேசி வருகிறார். அன்புமணியும் மற்றொரு பக்கம் பொதுக்குழு கூட்டத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நான்தான் அதனால் தலைவர் பதவி எனக்கு தான் எனக் கூறுகிறார்.

இதனிடையே கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், இவர்களின் இருவரின் சண்டையால் கட்சியின் மதிப்பானது குறைந்து கொண்டே வருவதாக அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில் இவர்கள் மீண்டும் இணைய வேண்டுமென எண்ணி சேலம் மாவட்டத்தின் எம்எல்ஏ அருள் இவர்கள் இணையவில்லை என்றால் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இப்படி கட்சிக்குள் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் வேளையில் நாளை சேலத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் பட்சத்தில் இன்று சேலம் எம்எல்ஏவான அருளுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous article2026 யில் ஹிட்டடிக்கும் தவெக.. சிதறும் திமுக கூட்டணி!! பக்கா பிளானை இறக்கிய விஜய்!!
Next articleவீடு தேடி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை; ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!