குடும்ப பிரச்சனையால் குழப்பத்தில் பாமக தொண்டர்கள்! இதெல்லாம் எங்கபோய் முடியப்போகுதோ?

0
22
PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!
PMK _ 2 treasurers?? Ramadoss and Anbumani announcement!!

கடந்த சில வருடங்களாகவே பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய போர் நடந்து வருகிறது. தலைவர் ராமதாசுக்கோ அதிமுக கட்சியுடன் கூட்டணி வைக்கணும்னு ஆசை. ஆனால் மகனுக்கோ பாஜக கட்சியுடன் கூட்டணி சேரணும்னு விருப்பம். அண்மையில் மேடையிலேயே இருவரும் வாய்க்கு வந்தபடி பேசியதை நம் அனைவரும் தொலைக்காட்சியில் பார்த்திருப்போம்.

இதனால் இருவரும் தங்களுக்கு சாதகமான ஆட்களுக்கு தொடர்ந்து பதவிகளை மாறி மாறி கொடுத்து வருகின்றனர். இவங்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டது என்னமோ பாவம் அப்பாவி தொண்டர்கள் தான். அப்பாவுடன் போவதா, இல்லை மகனுடன் தங்கள் கட்சி பணியை தொடர்வதா என்று கட்சி தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 50 பாட்டாளி மக்கள் ஆட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிமுக ஆட்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இப்படியே நிலைமை எல்லை மீறிப்போனால் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என அரசியல் விமர்சகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Previous articleஜாக்பாட் அடிக்கப்போகும் லோகேஷ்! எல்லாத்துக்கும் காரணம் கூலி படம் தான்!
Next articleஇதெல்லாம் நம்ம இருக்க நிலைமைக்கு தேவையா? வீண் பிரச்சனையில் மாட்டப்போகும் ரவி மோகன்?