அதிமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்த பாமக திட்டம்! மரு.ராமதாஸின் அறிக்கையால் கூட்டணியில் விரிசல்?

Photo of author

By Parthipan K

ஆளுங்கட்சியாகவும், தனது கூட்டணிக் கட்சியாகவும் இருந்து வரும் அதிமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமகவின் தமிழ்நாடு, புதுச்சேரி சிறப்புப் பொதுக்குழு இணைய வழியாக செப்டம்பர் 6ஆம் தேதி நடந்தது. சுமார் 11.30 மணிக்குத் துவங்கி மதியம் 2.45 மணியளவில் முடிந்த கூட்டத்தில் ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.

 

அதில் ராமதாஸ் இறுதியில் பேசியதாவது,

“நாம சாலைமறியல் போராட்டம் நடத்திக் கிடைத்த 20% எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் எவ்வளவு கிடைத்தது என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் தான் இதற்க்கு முழுமையாக போராடியிருக்கிறோம்.

 

மேலும், நான் 7 நாட்களில் சாலை மறியல் செய்துள்ளேன். அதனாலேயே இதற்கான ஒரு கமிஷனை அரசு நியமிக்கவேண்டும், 20% சதவீதத்திலே அதிலிருக்கும் சமுதாயங்களுக்கு எத்தனை சதவீதம் கிடைத்தது என்ற ஒரு தகவலையும் அந்த கமிஷன் கூறவேண்டும்.

 

அதோட பட்டியல் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு 19 சதவீதம் போக மீதியிருக்கும் 81 சதவீதத்தில் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் எவ்வளவு இட ஒதுக்கீடு கிடைத்தது என்ற தகவலையும் அந்த கமிஷன் ஆய்வு செய்யவேண்டும்.

 

உடனடியாக இருவர் அல்லது மூவர் கொண்ட ஒரு கமிஷனை உடனடியாக நியமிக்க வேண்டும். அந்த கமிஷனானது டிசம்பருக்குள் மொத்த அறிக்கையினையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

மேலும், அதில் வன்னியர் சமுதாயத்திற்கு மட்டுமே 15 சதவீதத்துக்கும் குறைவாக கிடைத்திருந்தால் மீண்டும் ஒரு கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை வரும்.

 

ஆகவே, அதனை முன் கூட்டியே நான் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் அந்தப் போராட்டத்துக்கு உங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். இது ஒரு கடுமையான போராட்டமாக இருக்கும். அதற்கும் நானே தலைமை ஏற்று நடத்துவேன்”

 

என மருத்துவர் ராமதாஸ் அந்தக் காணொளிக் காட்சி வாயிலாக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

அன்புமணி ராமதாஸும்

தற்போது தம்பிகள் படை, தங்கைகள் படை, பொதுமக்கள் படை என முப்படைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில்,

 

ராமதாஸ் அறிவித்துள்ள இந்த அடுத்த கட்டப் போராட்டத்தில் அப்படையினர் கலந்துகொள்ள ஆயத்தாமாகி வருகிறார்கள் என்று தெரிவிக்கின்றனர். இதன்மூலம் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.