பாமக நிர்வாகிகளுக்கு புது ஆர்டர் போட்ட ராமதாஸ்!.. இது எங்க போய் முடியுமோ!…

Photo of author

By அசோக்

பாமக நிர்வாகிகளுக்கு புது ஆர்டர் போட்ட ராமதாஸ்!.. இது எங்க போய் முடியுமோ!…

அசோக்

ramdadas

பாமகவின் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிவிட்டு தானே இனிமேல் தலைவர் எனவும், அன்புமணி இனிமேல் கட்சியின் செயல் தலைவராக இருப்பார் எனவும் அறிவித்து பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். கட்சிக்கு புதிதாக வந்துள்ள இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவும் எனவும் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். இதனால், அன்புமணியும், அவரின் ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த முடிவு பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ‘இதுவரை சட்டப்பேரவைக்கோ, நாடாளுமன்றத்துக்கோ செல்வதற்கு நான் ஆசைப்பட்டதில்லை. இனியும் செல்லப் போவதில்லை என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். என் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என இளைஞர்களும் கட்சி நிர்வாகிகளும் கட்டளையிட்டதாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றியைக் கருத்தில் கொண்டு சில செயல் திட்டங்களை வகுத்துள்ளேன்.

அதன்படி கட்சி அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்துள்ளேன். பா.ம.க நிறுவனர் என்பதோடு இனி கட்சியின் தலைவராகவும் செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளேன்’எனவும் விளக்கமளித்தார். இராமதாஸ் இந்த முடிவை எடுத்தது அவரின் வீட்டிக்குள்ளேயே சிலருக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கடந்த சில தேர்தல்களில் ராமதாஸை ஆலோசிக்காமல் யாருடன் கூட்டணி என்பதை அன்புமணியே முடிவு செய்தார். 2024 பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது கடைசி நேரத்தில் திமுகவிடம் அன்புமணி பேரம் நடத்தியதால்தான் ஒரு எம்.பி. சீட் கூட இல்லாம போனதாக ராமதாஸ் கருதுகிறார். இப்போது, 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கவும் அவர் திமுகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவது ராமதாஸுக்கு தெரிந்துவிட்டது. இப்படியே போனால் 2026 சட்டமன்ற தேர்தலின் போதும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் செய்துவிடுவார் என்பதற்காகவே தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை தூக்கிவிட்டார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ஒருபக்கம், கடந்த 2 நாட்களாக ராமதாஸை சந்தித்து அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பாமக தலைவர் நீக்கம் தொடர்பான என்னிடம் பேச யாரும் வர வேண்டாம்’ என ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.