விரைவில் இந்த இமாலய சாதனையை முறியடிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த மருத்துவர் ராமதாஸ்!

Photo of author

By Sakthi

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.மத்திய மாநில அரசுகள் இது தொடர்பாக பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளை ஆரம்பத்தில் கடைபிடிக்காமல் இருந்து வந்த பொதுமக்கள் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு அரசுகளின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருவதால் நோய்த்தொற்று பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி இருக்கிறது.இன்னும் சொல்லப்போனால் மேலை நாடுகளில் இந்த நோய்த்தொற்று தற்போது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை அமெரிக்காவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் பெரிய அளவில் இந்த நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவில் தான் உலகிலேயே அதிக உயிரிழப்பும் பாதிப்பும் உண்டாகி இருக்கிறது.

அப்படி இருக்க தற்போது மேலோட்டமாக பார்த்தோமானால் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மட்டும்தான் இந்த நோய்த்தொற்று இருக்கிறதோ என்ற ஒரு தோற்றம் ஏற்படுகிறது.இந்த நோய் தொற்று ஆரம்பித்த சமயத்தில் சீனா இந்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அந்த நாடு நோய்த்தொற்று பட்டியலிலேயே இல்லை ஒட்டுமொத்தமாக சீனாவில் அந்த நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு நோய் தொற்றும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதற்கு தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டி இருக்கின்றார்.

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைத்து ஒரே தினத்தில் 20 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு தமிழக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டது இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒரு சில பகுதிகளில் பரிசுப் பொருட்கள் அழிக்கப்பட்டன அதேபோல மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாமுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தடுப்பூசியை மிகவும் ஆர்வமாக செலுத்திக்கொண்டுள்ளன. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் தே இறையன்பு அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரிய தடுப்பூசி முகாமுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இனி வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் அதற்கு தேவைப்படும் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கான திட்டமிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் எல்லையோர 9 மாதங்களில் 100 சதவீத நோய் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று தன்னுடைய வலைத்தளத்தில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் 28 .36 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. தென்மாநிலங்களில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது இதுதான் முதன்முறை இதற்காக தமிழக அரசை பாராட்டுகின்றேன் என கூறியிருக்கிறார்.

நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் வாரம்தோறும் நடத்தப்பட வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் ஒரே தினத்தில் 33.42 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டது தான் இந்திய அளவில் சாதனையாக இருக்கிறது. அந்த சாதனையை தமிழக அரசு மிக முறியடிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது இந்த சூழ்நிலையில், அதற்கு ஏற்றவாறு தமிழ் நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை காலம் கால இடைவெளியை குறைக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பதிவிட்டு இருக்கின்றார்.