காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

0
187
pmk secretary murder in karaikal
pmk secretary murder in karaikal

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை! தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

காரைக்கால் மாவட்டத்தின் பாமக செயலாளராக பதவி வகித்து வந்த தேவமணி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் பாமக மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருபவர் தேவமணி.மேலும் இவர் திருநள்ளாறு தொழிற்சாலைகள் சங்க கௌரவ தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.இதுமட்டுமல்லாமல் விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார்.இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் திருநள்ளாறு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு திருநள்ளாறு பகுதியிலுள்ள அவருடைய கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில் மர்ம நபர்கள் இவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதனையடுத்து அருகிலிருந்த அவருடைய ஆதரவளர்களும் பொது மக்களும் இணைந்து அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் கை,கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அவருடைய கொலைக்கு காரமாணவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவிவியில் பதிவாகபட்ட காட்சி வெளியாகியுள்ளது. இதன் மூலமாகவும் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாமகவின் மாவட்ட செயலாளராக பதவி வகித்த அவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெற்ற அனுமதியற்ற மது விற்பனைக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொடுத்த கடனை திருப்பிக்கேட்டா, கத்திக்குத்து!! முதியவரை கொன்ற மூர்க்கன்!!
Next articleதமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை அறிகுறியா?