வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அருந்ததியர் எழுச்சி பேரவை

Photo of author

By Parthipan K

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்திற்கு ஆதரவு அளித்த அருந்ததியர் எழுச்சி பேரவை

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடும் பாமகவுக்கு ஆதரவு தந்த அருந்ததியர் எழுச்சி பேரவை.

தமிழகத்தில் கல்வியிலும் வேலை வேலை வாய்ப்பிலும் வன்னியர்கள் மிகவும் பின்தங்கி உள்ளதால் அவர்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 20 சதவீத தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆளும் ஆண்ட திராவிட கட்சிகளுக்கு தங்களுடைய கோரிக்கை வைத்தார் மருத்துவர் ராமதாஸ்.ஆனால் எந்த திராவிட கட்சிகளும் அவர்களுடைய கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன்‌ கூட்டணி சேரும் போதும் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையோடு பாமக கூட்டணி வைத்தது.அதில் மிக முக்கிய கோரிக்கை வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்பதாகும்.

ஆனால் பாமக தரப்பில் பல முறை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதனால் இப்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர பாமகவின் ஓட்டு வங்கி தேவை என்பதால் இந்த முறை தேர்தலுக்கு முன்பாகவே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு ஆணையை வெளியிட்டால் தான் அதிமுகவுடன் கூட்டணி என்ற நிபந்தனைகள் பாமக தரப்பில் வைக்கப்பட்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை ஆரம்பித்தது. அன்று சென்னை ஸ்தம்பித்தது ஆக்ரோஷமான வன்னிய இளைஞர்கள் ஓடும் ரயிலை மறித்தார்கள், போராட்டம் தீவிரம் அடைய பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை அழைத்து முதல்வர் பேசினார்.

முதல்வர் தரப்பில் தமிழகத்தில் விரைவில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று வாக்குறுதியை கொடுத்தார்.அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாம் என்று கூறினார்களாம்.

ஆனால் மருத்துவர் ராமதாஸ் அவர்களோ ஆணையம் அமைத்து அதன் விவரங்களை வெளியிட 6 மாதம் ஆகி விடும். ஆனால் தேர்தலே இன்னும் 60 நாள்களில் நடைபெற்று விடும்.ஆணையம் அமைக்கப்படும் என்பது எல்லாம் ஏமாற்று வேலை தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ள மக்கள் தொகை விவரங்களை வைத்து இட ஒதுக்கீடு  தரலாம்.அதை அரசு உடனடியாக செய்ய வேண்டும்,அது வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று கூறியிருந்தார்.

அதனால் பாமக தனது அறவழி போராட்டத்தை தொடர்ந்தது திசம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முன்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

பின்பு டிசம்பர் 14 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன்பாகவும் அற வழியில் கிராமங்களில் உள்ள மக்கள் போராட்டம் நடத்தினார்கள், மேலும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்ற தங்களுடைய கோரிக்கை‌ மனுவையும் கொடுத்தார்கள்.

அடுத்து டிசம்பர் 23-ஆம் தேதி புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள 528 பேரூராட்சிகள் முன் மக்களே மேலும் திரட்டி போராட்டத்தை நடத்தினார்கள்.அடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் இரு சக்கர வாகனங்களில் சென்று மக்கள் திரள் போராட்டம் நடைத்தினார்கள்.

இவ்வாறு டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30 ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.வன்னியர்களின் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுபவர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது என்று பாமக தரப்பில் கூறப்படுகிறது.

அதே போல் டிசம்பர் 30 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பாமகவுக்கு ஆதரவாக அருந்ததியர் எழுச்சி பேரவையும் கலந்து கொண்டு தங்களுடைய முழு ஆதரவை தந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.அனைத்து சாதி,மதம்,சமய மக்களும் வன்னிய இன மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் மற்றும் போராட்டத்தையும் ஆதரித்து வருவதால் மகிழ்ச்சியில் உள்ளார்களாம் பாமகவினர்.

மேலும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றும் அடுத்த வருடமும் (2021) எங்கள் போராட்டம் தொடரும் என்றும் பாமக தரப்பில் கூறப்படுகிறதாம்.

பாமகவின் இந்த  போராட்டத்துக்கு விரைவில் முற்று புள்ளி வைக்க வேண்டும் இல்லையெனில் தேர்தல் நேரத்தில் நமக்கு அவ பெயர் தான் ஏற்பட்டு விடும் என்று அதிமுக தரப்பில் பேசிக் கொள்கிறார்களாம்.