பாமக வில் பரபரப்பு.. ராமதாஸ் இல்லத்தில் அன்புமணி!! பொதுக்குழு கூட்டத்துக்கு முன் அதிரடி திருப்பம்!!

0
427
Pmk Vil Sensation.. Anbumani at Ramadas House!! Action twist before the general meeting!!
Pmk Vil Sensation.. Anbumani at Ramadas House!! Action twist before the general meeting!!

PMK: பாமக கட்சிக்குள் அதிகார மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் சென்றுள்ளார். இது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது மகனைக் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை ராமதாஸ் அடுக்கிக் கொண்டே போனார். அதுமட்டுமின்றி அவரது வீட்டிலுள்ள கேமராக்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் மேலும் அவரது இருக்கை அடியிலேயே ஒட்டு கேட்கும் கருவி சிம்முடன் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது ரீதியாக சைபர் கிரைமிடம் புகார் அளித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாமக பொதுக்குழு கூட்டத்திலாவது ஒன்று செய்வார்கள் என பலரும் எண்ணியிருந்தனர். ஆனால் இருவரும் தனித்தனி பொதுக்குழு கூட்டத் தேதியை அறிவித்து நீதிமன்றம் வரை சென்று விட்டது. அதில் அன்புமணிக்கு தான் பொதுக்குழு கூட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது தன்னுடைய வெற்றி என பறைசாற்றி வந்தார்.

இதன் நடுவே ராமதாஸின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமதாஸ் இல்லத்திற்கு அன்புமணி சென்றுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற இருக்கும் வேளையில் ஏதேனும் கட்சி இணக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்குமா என்ற கேள்வியை பலர் முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவர் தாயாரின் பிரனதனால் என்பதால் அவரை காண்பதற்காக சென்றதாக கூறப்படுகிறது.

அதேபோல ராமதாஸ் வெறும் வழிகாட்டி தான் செயல் தலைவராக அன்புமணி தான் இருந்தார் என கூறி வருவதை ஒருவரும் ஏற்கவில்லை. இவர்களின் உட்கட்சி மோதல் தீர்வு கண்டால் மட்டுமே வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கான அங்கீகாரத்தை பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. தற்போது தைலாபுரம் சென்றிருக்கும் அன்புமணி முடிவை கொண்டு வருவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Previous article“அதிமுக வில் சைலண்ட் வார்” எடப்பாடி தந்த அவமதிப்பு!! திமுக பக்கம் பெரிய தலைகள்!!
Next articleஎடப்பாடியை வெளியேற்ற சதி திட்டம்.. ஓங்கி நிற்கும் பாஜக கை!! ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி சசிகலா!!