பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

0
190

பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் தருமபுரியின் திமுக MP செந்தில்குமார்

மக்களவை தேர்தல் முடிவுகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரியே. இங்கு திமுகவின் சார்பாக டாக்டர் செந்தில்குமார் போட்டியிட்டார். அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து திமுகவின் வேட்பாளராக களமிறக்கப்பட்ட செந்தில்குமார் புதியவர் என்றாலும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீதான வெறுப்பில் அன்புமணியை எதிர்த்து பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு வெற்றி பெற்று விட்டார்.

இங்கு அன்புமணி ராமதாஸ் கடந்த 5 வருடங்களாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும் அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை என்றே பல்வேறு தரப்புகளிலும் கூறப்படுகிறது. மேலும் அன்புமணி ராமதாஸ் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திமுக வேட்பாளரும் அதே சமூகத்தை சேர்ந்தவர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையெல்லாம் விட திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பல்வேறு இலவச மற்றும் தள்ளுபடி சலுகைகளை தேர்தல் வாக்குறுதி அறிக்கையாக வெளியிட்டிருந்தார்கள்.

திமுக சார்பாக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும், மாணவர்கள் பெற்ற கல்வி கடன்களையும் தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தது. மேலும் 5 பவுனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் நகைகளையெல்லாம் இலவசமாக மீட்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தது. இது பெண்கள்,விவசாயிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வாக்குகளாக மாறியது.

இந்நிலையில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்ற திமுக காங்கிரஸ் கூட்டணி தேசிய அளவில் படு தோல்வியை தழுவி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டது. தமிழக சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசே ஆட்சியே மீண்டும் தொடர்கிறது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்வதாக தெரிவித்துள்ளது. இதற்கு வழக்கு தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் சட்டப்படி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மனுதாரரான என்னை கேட்காமல் இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று அறிவித்துள்ளார்.

தருமபுரியின் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் எட்டு அந்த தொகுதி மக்கள் வழிச்சாலையால் பாதிக்கபட கூடாது என்று செயல்பட்டு வரும் நிலையில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவின் செந்தில்குமார் சமீபத்தில் இணையத்தில் பிரபலமாக்கப்பட்ட நேசமணியை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதைக்கண்ட தொகுதி மக்களும் பாமகவினரும் சமூக வலைத்தளங்களில் அவரை கேள்விகளை கேட்டு விமர்சித்து வருகிறார்கள்.அவரும் தொடர்ந்து இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கி வருகிறார். இது மட்டுமில்லாமல் தனக்கு வாக்களித்த மக்களுக்கு திமுக MP செந்தில்குமார் நன்றி தெரிவிக்க பதிவிட்டத்தில் கூட அந்த தொகுதியில் உள்ள ஊர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டது மேலும் சர்சைக்குள்ளானது. எது எப்படியோ பாமகவினரிடம் சிக்கி கொண்டு தவிக்கும் திமுக MP செந்தில்குமாருக்கு கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் யாராவது சரியாக செயல்பட ஆலோசனை கூறினால் நல்லது.

Previous articleவெஸ்ட் இண்டீஸ் அணியிடம் மரண அடி வாங்க தயாராகும் பாகிஸ்தான் அணி
Next articleதிருமணம் ஆகாமலே நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமா? ரசிகர்கள் அதிர்ச்சி