பாஜகவுக்கு டிவிஸ்ட் கொடுக்கும் பாமக.. விஜய்யுடன் போட்ட டீலிங்!! வெளியாகப்போகும் பரபர அறிவிப்பு!!

0
7
pmk-will-give-bjp-a-split-dealing-with-vijay-exciting-announcement-to-be-released
pmk-will-give-bjp-a-split-dealing-with-vijay-exciting-announcement-to-be-released

TVK PMK: ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியில் உறுதியாக இருக்கும் நிலையில் மாற்றுக் கட்சியினர் அதற்கு எதிராக கூட்டணி வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் பிளவில் இருந்த அதிமுக மற்றும் பாஜக மீண்டும் இணைந்துள்ளது. ஆனால் இவர்களை தாண்டி மூன்றாவது கட்சி ஒன்று கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என கூறுகின்றனர். அதிமுக பாஜக கூட்டணி பிடிக்காத கட்சிகள் தொடர்ந்து விலகி வருவதை பார்க்க முடிகிறது.

அந்த வரிசையில் பாமகவும் பாஜகவை விட்டு வெளியேறிவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாறாக அரசியலுக்கு வருகை புரிந்து இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளதாம். அதேபோல தற்போதைய விஜய்க்கு தேர்தல் வியூக அமைப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் 2016 ஆம் ஆண்டு அன்புமணிக்கு அரசியல் வியூக அமைப்பாளராக இருந்தார். தற்போது இவர்களை இணைக்கும் பாலமாக செயல்படுவது ஜான் ஆரோக்கியசாமி எனக் கூறுகின்றனர்.

இவர்கள் கூட்டணி அமைந்தால் இரண்டரை ஆண்டுகள் அன்புமணியும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் விஜய்யும் ஆட்சி செய்வது என இதனைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இதுகுறித்த பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளனர். இவர்கள் கூட்டணியால் அதிமுக திமுக வாக்கு வங்கி சிதற அதிக வாய்ப்புள்ளது. முன்னதாகவே மாற்று ஆட்சி வேண்டுமென நினைப்பவர்கள் பெரும்பாலும் சீமானுக்கு ஆதரவளிப்பது உண்டு. அந்த வரிசையில் தற்போது விஜய் இடம் பெற்றுள்ளார்.

Previous articleநானும் எடுக்குறேன்டா சாதி படம்!.. ரஞ்சித், மாரியை திட்டும் இயக்குனர்!…
Next articleஇந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…