பூச்சி மருந்தை போட்டு குழம்பு வைத்த பாட்டி! பேரன்களுக்கு நேர்ந்த சோகம்

ஆந்திராவில் பாட்டி ஒருவர் சிக்கன் குழம்பு சமைத்த போது பூச்சி மருந்தை போட்டு சமைத்ததை உண்ட அவரது பேரன்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள செருலோபள்ளியில் தனம்மா என்பவர் தனது மகன்கள் ஜீவா மற்றும் ரோஹித் இருவரையும் அவரது குடிபாலாவில் உள்ள அம்மா வீட்டுக்கு அனுப்பி உள்ளார். இதனை அடுத்து பேரன்கள் வந்த மகிழ்ச்சியில் பெரங்களுக்கு சிக்கன் குழம்பு சமைத்து குடுக்கலாம் என எண்ணி அவரது பாட்டி சிக்கன் குழம்பு செய்துள்ளார்.

அப்போது அதில் சிக்கன் மசாலாவிற்க்கு பதிலாக பூச்சி மருந்தை போட்டு சமைத்து அதை பேரன்கள் இருவருக்கும் பரிமாறி விட்டு பாட்டியும் சாப்பிட்டுள்ளார்.இதனையடுத்து அனைவரும் மயக்கமடைந்துள்ளனர்.

இதை அடுத்து அக்கம் பக்கம் இருந்து ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததை உணர்ந்து அவர்கள் வந்து பார்த்த போது பேரன்கள் மற்றும் பாட்டி மயங்கி கிடப்பதை அறிந்துள்ளனர்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே முவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிறுவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆந்திர மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.