ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

0
147

ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

ஹைதராபாத் ஆந்திர மாநிலத்தில் அணகாப்பள்ளியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிருந்த போது ஏசியில் இருந்து திடிரென்று விஷவாயு கசிவு பரவி வந்தது அதை பணியாளர்கள் சுவாசித்து 50க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர்.

அணகாப்பள்ளியை மாவட்டத்தை சேர்ந்த அச்சுதாபுரத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் 2000க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணியாளர்கள் எப்போதும் போல் வேலை செய்து வந்திருந்தன யாரும் அறியாமல் விஷவாயு கசிந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் தொழிற்சாலையில் பணியாற்றிருந்தவர்களில் 50க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் விஷவாயுவை நுகர்ந்து வாந்தி,மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தன.பிறகு அங்கிருந்த சில பணியாளர்கள் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பிறகு பாதிக்கப்பட்ட பணியாளர்கள் அனைவறையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விஷவாயுவின் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் பதிக்கபட்ட பணியாளர்களுக்கு உயிருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று போலீசார் கூறப்படிருக்கிறார்.

Previous articleபுதுகோட்டை அருகேயுள்ள அரிமளம் சாலையில் சுரங்கம் போன்ற பள்ளம்!  வாகன ஓட்டிகள் கோரிக்கை!
Next articleவயதான மரத்திலிருந்து தயாரித்த கருங்காலி வளையலை யாரெல்லாம் அணியலாம்?