திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி திடீர் கைது

Photo of author

By Anand

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி திடீர் கைது

Anand

Police Arrested R S Bharathi

இன்று காலை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். சென்னை ஆலந்தூரில் வசித்து வரும் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் கைது செய்ததால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு கைதுக்கு காரணமாக கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில்  ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  அவதூறாக பேசியது தான் என்று கூறப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அந்த கூட்டத்தில் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார்.  இதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  கைது செய்த பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.