இதில் திடீர் திருப்பமாக இவர் மீது கந்துவட்டி புகார் எழுந்துள்ளது. இவ்வாறு கந்துவட்டி புகார் எழுந்ததைத் தொடர்ந்து சலூன்கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.
மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் தான் சலூன் கடைக்காரர் மோகன். இவரிடம் மதுரை அன்பு நகர் பகுதியைச் சேர்ந்தவரான செங்கை ராஜன் என்பவர் மருத்துவச் செலவுக்காக 30 ஆயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து அந்தப் பணத்தை செங்கை ராஜன் அவரிடம் திருப்பி செலுத்தியுள்ளார்.
இவ்வாறு வாங்கிய பணத்தை திருப்பி செலுத்திய நிலையிலும் மேலும் அதிக வட்டி கேட்டு சலூன் கடைக்காரர் மோகன் செங்கை ராஜனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக குறிப்பிடுகிறது. இதனையடுத்து இதுகுறித்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் சலூன் கடைக்காரர் மோகன் மீது செங்கை ராஜன் புகார் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு தன் மீது கந்துவட்டி புகார் எழுந்ததையடுத்து தற்போது சலூன் கடைக்காரர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.