தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!

Photo of author

By Sakthi

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சிறுபான்மையினர் துறைக்கான மானிய விவாதம் நடைபெற்ற சமயத்தில் அந்தத் துறைக்கான அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார் அதில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்து பேசினார்.அதேபோல அதற்கு முன்பாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றினார். அந்த விவாதத்தின் போது நீட் தேர்வு ரத்து உட்பட பல முக்கிய விவாதங்கள் நடைபெற்றது.

அதேபோல மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது அத்துடன் மத்திய அரசு கொண்டுவந்த விவசாய சட்டத்திற்கும் எதிராக தமிழக சட்ட சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்றைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகின்றது இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டம் நடத்தினார்கள். மாவட்ட மற்றும் மாநகரங்களில் இருக்கின்ற காவல்துறை அதிகாரிகளுடன் இந்த கூட்டம் நடந்தது என்று சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகளுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் தமிழக தலைமை காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு ஒன்றிணைந்து இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள்.

அந்த உத்தரவில் இரவு எல்லா காவல்துறை அதிகாரிகளும் ரோந்து பணியில் இருக்க வேண்டும் நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி என்ற காரணத்தால் இரவு சமயத்தில் திடீரென்று யாராவது பொது இடத்தில் விநாயகர் சிலையை வைப்பதற்காக திட்டமிடலா.ம் கவனமாக செயல்படுங்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு என்று யாரையும் அழைத்து வர வேண்டாம், முக்கிய குற்றவாளிகள் என்றால் மட்டும் காவல்துறை கஸ்டடியில் உள்ள போது மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். 9ம் தேதி காலை முதல் இரவு வரையில் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அவரவர் அலுவலகத்தில் தயாராக இருக்க வேண்டும். யாரும் விடுப்பில் செல்வதற்கு அனுமதி இல்லை விடுப்பில் சென்றவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டவிட்டிருக்கிறார்கள்.

அவர்களுடைய இந்த உத்தரவையடுத்து இன்று காவல்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் டிஐஜி உள்ளிட்டோர் முதல் அவரவர் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு தொடர்பான விவரங்களை தயாராக வைத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.அதே சமயத்தில் சென்ற ஆட்சிக்காலத்தில் காவல் துறை சார்பாக செய்யப்பட்ட சாதனைகளை தெரிவித்தும் பழிவாங்கும் நடவடிக்கையாக எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்கு போடுவது தொடர்பாகவும், உரையாற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி குறிப்புகளை சட்டசபைக்குள் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்.

இப்போது மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில் முதலமைச்சர் வெளியிட்ட கொள்கை குறிப்பு ஒன்றில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழக காவல்துறைக்கு நம்முடைய அரசு எப்போதும் வழிகாட்டியாகவும் உறுதுணையாகவும் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.போதுமான திட்டமிடல் மற்றும் முறையான முயற்சிகள் மூலம் இதுபோன்ற குறிக்கோள்களை தமிழக காவல்துறை நிச்சயமாக எட்டிப்பிடிக்கும் என்ற நம்பிக்கை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.தமிழக காவல்துறையின் எல்லாவிதமான முயற்சிகளும் மனிதாபிமானத்துடன் மற்றும் நட்போடு பொது மக்களை அணுகும் குறிக்கோள்களை சென்றடைவதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.