காபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?

0
163

காபி டே உரிமையாளர் சித்தார்த்தா சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பிறகு மீண்டும் சில தினங்களுக்கு பிறகு பிணமாக கண்டெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அவருக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாக கூறுகின்றனர். இதனிடையில் காபி டே நிறுவனர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேக கேள்விகளை போலீஸ் அதிகாரி எழுப்பியுள்ளார்.

காபி டே நிறுவனர் சித்தார்த்தா வங்கியில் வாங்கிய ஏறக்குறைய 10 ஆயிரம் கோடி கடன் சுமை மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த திங்கள்கிழமை மாலை நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என கூறுகின்றனர். ஆனால் இவரது தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

சித்தார்த் காணாமல் போன 3 நாட்களுக்கு பிறகு இவரது உடல் 36 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல் பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி அஞ்சலி நடைபெற்றன.

இந்த நிலையில், சித்தார்த் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக கமிஷனர் கூறியுள்ளார். சந்தீப் பாட்டீல் பெங்களூரு மாநகர போலீஸ் இணை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மங்களூருவில் சந்திப் பாட்டீல் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறுகையில் காபி டே அதிபரும் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணாவின் மருமகனுமான சித்தார்த்தா மங்களூர் அருகே நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பல்வேறு மர்ம முடிச்சுகள் சந்தேகங்கள் நிறைந்துள்ளன என்றார்.

காவல்துறை விசாரணையிலும் சேகரிப்பட்ட தகவல்களின் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது. ஆனால் இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கவில்லை.

குறிப்பாக சித்தார்த்தா கடைசியாக அணிந்திருந்த சர்ட் அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட பொழுது அவருடைய உடலில் ஷர்ட் இல்லை. அவரது உடலில் ஷர்ட் இல்லாததால் அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலையா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleவாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!
Next articleதிமுகவை மரண கலாய்த்த முதல்வர்! விளம்பரத்துக்கு 4 படம் அடுத்து தலைவர்! டீ கடை பஜ்ஜி கடை பிரியாணி கடை இதான் தொழில்!