காரின் மேற்புரத்தில் அமர்ந்து மாஸ் காட்டிய பவன் கல்யாண்.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை..!

0
211

காரின் மீது பயணம் செய்ததால் பவண் கல்யாண் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக அங்குள்ள வீடுகளை இடித்தனர். இதனால், பல கிராம மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில், வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தெலுங்கு திரையுலகின் முண்ணனி நடிகரும், ஜனசேனா என்ற கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் காரில் இடாப் கிராமத்திற்கு சென்றார்.

அப்போது, அவர் திரைப்பட பாணியில் காரின் மேற்பரப்பில் தனது ரசிகர்கள் சிலருடன் அமர்ந்து  ஆதரவாளர்கள் சூழ பயணம் செய்தார். இந்த வீடியோ சமூகவலைதங்களில் வைரலான நிலையில், அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கினர். திரைப்பட பாணியில் அவர் பயணம் செய்ததோடு, அவரது ஆதரவாளர்களும் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தனர்.

இந்நிலையில், சிவகுமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளாஎ. அந்த புகாரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமாறு பவன் கல்யாண் தனது ஆதரவாளர்களுடன் பயணம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது பொறுப்பற்ற தனத்தால் தான் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே கிழுந்து விட்டதாகவும் அவரது புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பவன் கல்யாண் மீதும், அவரது ஒட்டுநர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இளைய சமூதாயத்தினர் பலர் பவன் கல்யாணை தங்களது முன்னுதாரணமாக எடுத்து செயல்படும் நிலையில், அவர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அவரை பின்பற்றுபவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் எனவும் அவரது செயல்பாடுகளில் கவனம் வைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Previous articleமோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!
Next articleபதவிக்கு ஆப்பு வைத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு! வசமாக சிக்கிய அமைச்சர் பொன்முடி!