கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

Photo of author

By Rupa

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

Rupa

Police fined PM for not following Corona rules! Country people in shock!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் பிரதமருக்கு அபராதம் போட்ட போலீசார்! அதிர்ச்சியில் நாட்டு மக்கள்!

கொரோனா தொற்று சென்ற வருடம் உலகத்தையே சுற்றி சுற்றி வந்தது.அத்தொற்றால் உலகளவில் பலக்கோடி பேர் உயிரிழந்தனர்.அத்தொற்று மக்களை பாதிக்காமல் இருக்க அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை போட்டது. கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது.

நமது இந்தியாவில் நேற்று நம் பிரதமர் நரேந்திரமோடி தொற்று அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களை காணொளி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்தி ஊரடங்கை வெளியிட்டனர். தொற்று பரவாமல் இருக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு தலைவர்களே தனது விதிமுறைகளை மீறிவிடுகின்றனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நார்வேயில்,கொரோனா விதிமுறைகளை மீறியதாக அந்நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.நார்வே நாட்டில் இருமுறை பிரதமாராக பதவி வகித்துள்ளவர் தான் எர்னா சொல்பேர்.அன்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் 10 க்கும் மேற்பட்டோர் விழாக்களில் கலந்துக்கொள்ள அனுமதி இல்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் பிரதமர் எர்னா சொல்பேர் தனது 60 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.அந்த விழாவில் அவரது குடும்பத்தினர் 10 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டதால் அந்நாட்டு போலீசார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.இவரைப்போல தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் தனக்கு தொற்று உறுதியாகிய நிலையிலும் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார்.இவர் இவ்வாறு செய்தது அனைத்து நாடுகளும் இவர் மீது எதிர்ப்பு தெரிவித்தது.

மக்களை சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்ற சொல்வதற்குமுன் அனைத்து தலைவர்களும் முதலில் அதை சரியாக பின்பற்ற வேண்டும்.