சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

Photo of author

By Rupa

சோழ முத்தா போச்சா என்ற போக்கில் பைக் பிரியர்களுக்கு போலீசார் வைத்த ஆப்பு!!

வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு மிகப்பெரிய கனவாக இருப்பது மோட்டார் வண்டி தான்.அவ்வாறு வாங்கிய மோட்டார் வண்டிகளில் தங்களுக்கு பிடித்தார் போல மாற்றம் செய்தும் கொள்கின்றனர்.அவ்வாறு செய்யும் பொழுது மக்களுக்கு அசௌகரியத்தை கொடுக்கும் முறையில் ஒலிப்பான்,வண்ணமையான லைட்டுகள் மற்றும் அதிகம் சத்தம் எழுப்பக் கூடிய சைலன்சர் போன்றவற்றை வைத்துக்கொள்கின்றனர்.

அவ்வாறு அது வைத்து எழுப்பும் சத்தத்தினால் மக்கள் பலர் எரிச்சலடையவும் செய்கின்றனர்.இவ்வாறு மக்களுக்கு அசௌகரியத்தை தரும் எந்த வித பொருட்களையும் வண்டிகளில் பயன்படுத்தக்கூடாது என்று நமது சட்டத்தில் உள்ளது.ஆனால் பலர் அதனை மீறி பயன்படுத்தி தான் வருகின்றனர்.அந்தவகையில் திருப்தியில் நடந்த சம்பவம் அனைவரையும் வியப்படைய செய்கிறது.திருப்பதியில் விலைமதிப்புள்ள மோட்டார் வண்டியில் அதிகம் சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தி இளைஞர்கள் வண்டி ஓட்டி வந்துள்ளனர்.பலமுறை அம்மாநில போலீசார் அறிவுரை கூரியும் இளைஞர்கள் கேட்கவில்லை.

அதனால் திருப்பதி எஸ்.பி வெங்கட் அப்பல நாயுடு ஆணை கிணங்க விலைமதிப்புள்ள ராயல் என்பீல்டு மோட்டார் வண்டியின் அதிகம் சத்தம் தரக்கூடிய சைலன்சர் கழற்றி காவல்நிலையத்தில் வெளியே வைத்துள்ளனர்.பிறகு புல்டோசர் கொண்டு அந்த சைலன்சர்களை நொறுக்கியுள்ளனர்.போலீசாரின் இவ்வாறான செயலை கண்டு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.மேலும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மேல் சிறிதளவு அக்கறை கொண்டு நல்லவற்றை எடுத்து கூற வேண்டும் என்று வெங்கட் அப்பல நாயுடு கூறியுள்ளார்.