இந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு கொடுக்கும் அடுத்த அப்டேட்??
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அதிமுக ஆட்சியின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது.
அத்துடன் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது அதாவது பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அல்லது வி.ஆர்.எஸ் வாங்கின பிறகும் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பென்ஷன் ஆக அரசு தளத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களாக கருதப்படுவர்.
புதிய ஓய்வூதிய திட்டம் என்பது அரசு ஊழியர்கள் வி.ஆர்.எஸ் வாங்கினாலும், அல்லது ஓய்வு பெற்றாலும் அதன் பிறகு மாதந்தோறும் பென்சன் அரசு தலைப்பில் ஏதும் வழங்கப்படாது.
மாறாக அவர்கள் ஓய்வு பெறும் போது ஒரு கணிசமான தொகை ஊழியர்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும். இதற்கு அரசு ஊழியர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு அப்போதே எழுந்தது. இருப்பினும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இதனை அமல்படுத்தியது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவரப்படும் என திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டுள்ளது. தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அன்று தமிழக காவல்துறையில் 8,431 ஆண் காவலர்கள் பணியில் சேர்ந்தனர். இவர்கள் பணியில் சேருவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணிக்கு விண்ணப்பித்து நியமிக்கப்பட்டவர்கள்.
2003 ஆம் ஆண்டு அவர்கள் பணியில் சேர்ந்ததால் அவர்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் அவர்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே காவலர்கள் பணிக்கு விண்ணப்பித்திருந்ததால் “எங்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, 25 ஆண் காவலர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர். அதில், தங்களை பழைய ஓய்வூதித் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசும், தமிழக காவல்துறையையும் பதில் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிடும் எனவும் இந்த வழக்கு காலதாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.