எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

Photo of author

By Parthipan K

எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் அதிகளவில் காவலர் குவிப்பு !!

Parthipan K

தமிழ் இசை உலகில் பாடகரான எஸ்பி பாலசுப்பிரமணியம், சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் தற்போது கூடுதலாக காவலர்களை குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இசை உலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு அருகே உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக , எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியானது திரை உலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .இதனையடுத்து, தற்போது எஸ்பிபியின் மகன் எஸ்.பி.பி.சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி ஆகியோர் அனைவரும் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சென்றுயுள்ளனர் .மேலும், எஸ்பிபி உடல் நிலைக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் தீவிர ஆலோசனையில் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.பி.பியின் உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதனால் பாதுகாப்பு கருதி மருத்துவமனையில் முன்பு காவலர்களை அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.சுமார் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.