TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நேற்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். வழக்கத்திற்கு மாறாக தனது கொள்கை தலைவர்களுடன் அண்ணா மற்றும் எம்ஜிஆர் புகைப்படம் இடம்பெற்று இருந்ததால் இவரின் பேச்சு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. அதற்கேற்றார் போல் அரசியல் எதிரி கொள்கை எதிரி என திமுக மற்றும் பாஜக இருவரையும் நேரடியாகவே தாக்கி பேசினார்.
அதிலும் திமுக கூட்டணியில் இருப்பவர்களையும் பாஜக கூட்டணியில் இருப்பவர்களையும் மறைமுகமாக சாடி பேசியது தான் மாநாட்டின் ஹைலைட்டாக இருந்தது. அதில் குறிப்பாக கமலஹாசனை குறிப்பிட்டது அனைவராலும் அறிந்து கொள்ள முடிந்தது. நான் ஒன்றும் மார்க்கெட் இல்லாமல் அரசியலுக்குள் வரவில்லை மார்க்கெட் இருக்கும்போது வந்துள்ளேன் என்று சுட்டிக்காட்டி கூறினார். இவர் கூறுவதை பார்க்கும் போது கமலஹாசனும் உதயநிதியும் நான் மார்க்கெட்டை இழந்து நின்றனர்.
அந்த தருணத்தில் இவர்கள் அரசியலுக்குள் நுழைந்ததை தான் இவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இவர் மறைமுகமாக கமலஹாசன் மற்றும் உதயநிதியை தனது மாநாட்டில் சீண்டியது அப்பட்டமாக தெரிகிறது. இது ரீதியாக கமலஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் எங்கேயாவது என் பெயரை குறிப்பிட்டாரா எனக்கு தம்பி போன்றவர் என்று கூறி விலகி விட்டார்.