இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சனின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷிசுனக் மற்றும் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோரிடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இப்படியான நிலையில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு பிரிட்டன் மிகவும் முக்கியமான சந்தையாக இருக்கிறது. அந்த நாட்டின் ஆடை இறக்குமதியில் இந்திய ஆடை பங்களிப்பு 9.18 சதவீதம் என்ற அளவிலிருக்கிறது. பிரிட்டனின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் லிஸ் ட்ரஸ் இந்தியா மற்றும் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்.
இரு நாடுகளுக்குமிடையே எதிர்பார்த்தபடி எதிர்வரும் அக்டோபர் மாத இறுதிக்குள்ளாக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
வர்த்தக ஒப்பந்தம் உண்டாகும் போது, இந்திய ஆடைகள் இங்கிலாந்தில் வரியின்றி இறக்குமதியாகும். மற்ற போட்டி நாடுகளை எதிர்கொண்டு, பிரிட்டனுக்கான ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றுவது எளிதாகும் என்றும், சொல்லப்படுகிறது.