சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!

Photo of author

By Sakthi

சென்னை மாநகராட்சி 165 வது வார்டு கவுன்சிலராக பொறுப்பேற்று பணியாற்றி வருபவர் நாஞ்சில் பிரசாத் உடல்நலக் குறைவு காரணமாக, இவர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான நாஞ்சில் பிரசாத் மாநகராட்சி தேர்தலில் 165 வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நாஞ்சில் பிரசாத் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருடைய மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அவருடைய மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஆற்றல்மிக்க செயல்வீரர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்கள் திடீரென்று காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

ஆலந்தூர் தொகுதியில் இருக்கின்ற மக்களிடையே இவருடைய தொண்டு காரணமாக முழுதளந்த தூய்மையான சேவையின் காரணமாக, அளவற்ற நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர் ஆலந்தூர் நகராட்சி மன்ற உறுப்பினராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு எல்லோரிடமும் பாராட்டையும் பெற்றவர். அந்த மக்களிடையே மட்டும் அல்லாமல் எல்லா கட்சியினரின் அன்பையும், ஆதரவையும் தொகுதியாக பெற்றிருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தலைமை நடத்துகின்ற ஆர்ப்பாட்டமும் போராட்டமும் பேரணியும் எதுவாக இருந்தாலும் அதற்கான அழைப்பு வந்தவுடன் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியின் தோழர்களுடன் மூவண்ண கொடியை கையில் ஏந்தி கம்பீரமாக முன்னின்று செயல்பட்ட தேசிய தளபதியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. சிலவற்றை ஈடு செய்ய முடியும். ஆனால் ஆற்றல்மிக்க தோழர் நாஞ்சில் பிரசாத் மறைவு ஈடு செய்யவே முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும். இதன் மூலமாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சின்னதுரை விட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார் அழகிரி.

மேலும் திரு மூஞ்சில் ஈஸ்வர பிரசாத் அவர்களுடைய மறைவு காரணமாக, வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும், தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை விட்டு பிரிந்த திரு நாஞ்சில் பிரசாத் அவர்களின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணியளவில் ஆலந்தூர் ஆதம்பாக்கத்தில் இருக்கின்ற அவருடைய இல்லத்தில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த தேசிய செயல் வீரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கே எஸ் அழகிரி தெரிவித்து இருக்கிறார்.