தமிழகத்தில் இவர்கள்தான் போதை பொருளை விற்பனை செய்கிறார்கள்! ஆர் எஸ் பாரதி கடும் குற்றச்சாட்டு!

0
175

தமிழக ஆளுநர் அவர்களை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார் அப்போது தமிழகத்தில் மாணவர்களிடையே போதை பொருள் கட்டுப்படுத்துவதை நிர்வாக திறமையின்மை காரணமாக தமிழக அரசால் தடுக்க இயலவில்லை என்று கூறினார். அதோடு அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் போதை பொருள் கொண்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதோடு இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் மனு வழங்கியதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆகவே மதுபானங்களில் மிகப்பெரிய கொள்ளை நடைபெறுவதாக தெரிவித்த அவர் 24 மணி நேரமும் பார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும் சட்டவிரோதமாகவும் பார்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

அவருடைய இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசிய திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழகத்தில் போதை பொருள் அதிகளவில் நடமாட்டம் இருப்பதாக ஆளுநர் அவர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார் வழங்கியுள்ளார். ஆனால் சிபிஐ குட்கா விற்பனை குறித்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்திருக்கிறது.

நாளைய தினம் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜராக வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரிடம் புகார் வழங்குகிறார். போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பாஜகவினர் என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Previous articleசென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்!
Next articleரூ 1000 வழங்கும் பணி தொடக்கம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!