PMK : அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் இடையே ஒரு சில மாதங்களுக்கு முன்பு பேரன் முகுந்தனை பதவி நியமனம் செய்வது குறித்து மோதல் நிலவியது. இதற்கு முற்றிலும் அன்புமணி ராமதாஸ் மறுப்பு தெரிவித்தார். மேற்கொண்டு முகுந்தனும் பதவி ரீதியாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் இளைஞரணி தலைவர் முகுந்தன் பெயர் பொறிக்கப்பட்டாலும் அவர் அந்த இடத்திற்கு வருவதில்லை.
இப்படியே அப்பா மகன் அக்காவின் மகன் என்று மூவரும் கட்சிக்குள் ஒருவருக்கொருவர் தலைகாட்டாத சூழல் நிலவி வந்தது. திடீரென்று பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை பதவிலிருந்து நீக்கிவிட்டார். இது கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலாக உள்ளது. மேற்கொண்டு இது அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள மோதல் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ஆனால் அன்புமணி அப்பாவின் செயலுக்கு பதிலடி கொடுக்காமல் அமைதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில் பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறதென்று கூறுகின்றனர். அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அக்கட்சியின் பெயரைக் குறித்து ஆலோசனையில் உள்ளாராம். “புதிய பாட்டாளி மக்கள் கட்சி” என்ற பெயருடன் புது அதிகாரத்தில் அறிவிப்புகள் வெளியாகும் என்று பனையூர் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
மேற்கொண்டு புதிய கட்சி புதிய தலைமை என்று அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யக் போவதாகவும் நாளடைவில் இவர் தொடங்கும் கட்சியுடன் யாரை கூட்டு வைக்கலாம் என்பது குறித்த அறிவிப்புக்கள் அனைத்தும் வரும் என்று கூறியுள்ளனர்.