“அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்” ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து பாமக தலைவர் கருத்து!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில் அவர் கூறியது,மதுவிலக்கு அமல் படுத்தும் படி முதன் முதலில் பாமக தான் வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில் தான் இதர கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்த கோரி உள்ளனர். அதேபோல சமீபத்தில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் 33 சதவீதம் டாஸ்மாக் மூலமே வருவாயை ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு நாட்டின் வளர்ச்சி அல்ல. இது நாட்டின் பெரும் வீழ்ச்சி என்று நாம் கருத வேண்டும்.
ஏனென்றால் 33 சதவீதம் வருவாயை ஈட்டிய நிலையில், அந்த அளவிற்கு இழப்பையும் சந்திக்க வேண்டி உள்ளது. அதேபோல மதுபானம் விற்பனையில் தமிழக அரசு இலக்கு வைப்பது மிகவும் தவறு என்று குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு மாறாக கல்வியில் இலக்கு வைப்பது நல்லது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர வேண்டும் போன்ற இலக்குகளை வைப்பதை விட்டு, மது விற்பனைக்கு இலக்கு வைக்காதீர்கள் என கூறியுள்ளார்.
இவ்வாறு மது விற்பனைக்கு இலக்கு வைப்பது தமிழக அரசுக்கே கேடு என தெரிவித்துள்ளார். அதேபோல செய்தியாளர் ஒருவர் ஜெயலலிதா அவர்களின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை பற்றி கேள்வி எழுப்பினார். அது குறித்து அவர் பேசியதாவது, ஆறுமுகசாமி ஆணையம் சமர்ப்பித்துள்ள அறிக்கையானது வடிவமைக்கப்பட்டதாக உள்ளது. அதனை வைத்து அரசியல் செய்யலாம் என கூறினார். இது அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.