2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் புரட்டி போட்ட பொள்ளாச்சி பாலியல் வழக்கானது இன்று நீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இன்று அதிகாலையிலேயே குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் சாலையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். ஒன்பது பேர் மீதும் உள்ள குற்றமானது நிரூபனாமான நிலையில் அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி நந்தினி தேவி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேற்கொண்டு பாதிப்படைந்த எட்டு பெண்களுக்கும் 85 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
வழக்கின் முழு பின்னணி:
2019 ஆம் ஆண்டு ஆன்லைனில் ஆசை வார்த்தைகள் பேசி பெண்ணை தனியாக அழைத்து கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் வீடியோவை வைத்து அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனை அறிந்த அவரது சகோதரர் இது குறித்து விசாரித்த போது அவர்கள் இதனையே வேலையாக செய்து வந்தது தெரிந்துள்ளது. இறுதியில் இது ரீதியாக மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருநாவுக்கரசர், சபரி ராஜன், எஸ்வந்த், சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இது ரீதியான வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. மேற்கொண்டு இதனை முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோக்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது. மேற்கொண்டு இதில் அரசியல் வாரிசுகளும் சிக்கி உள்ளதாக அப்போதைய எதிர்கட்சியாக இருந்த திமுக தொடர்ந்து கூறிவந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய இந்த வழக்கின் தீர்ப்பானது ஆயுள் தண்டனை வழங்கி முடித்து வைத்துள்ளனர்.