வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்!

Photo of author

By Rupa

வாக்குச்சாவடியில் அரிவாள் வீச்சு! தெரித்தோடிய மக்கள்!

சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில்.பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை என அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அந்தவகையில் தல அஜித் ஓட்டு போடும் இடத்தில் அவர்களது ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் போது அதிக அளவு கோவமுற்றதை அனைவரும் பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர்.அதனையடுத்து தளபதி விஜய் அவர்கள் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்து வந்ததையும் வியப்படைந்து பார்த்தோம்.

அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்களர் செய்தது காரியம் இவை  அனைத்தயும் மிஞ்சியது.புதுக்கோட்டையில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.அங்குள்ள உதவி ஆய்வாளர் ரங்கசாமி,காவலர் இளையபெருமாளுடன் முதலில் தகராறு செய்தார்.அதன்பின் வாக்குப் பெட்டிகள் இங்கிருந்து எப்படி போகிறது என்று பார்க்கிறேன் என்றார்.இவ்வாறு குடிபோதையில் சவால் செய்துவிட்டு அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

அதன்பின் அரிவாளுடன் பள்ளியின் பின்பக்கம் வந்து வாக்கு பதிவு மையத்திற்குள் வந்து,வாக்குபதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்த வி.வி பேடை அரிவாளால் தாக்கி உடைத்தார்.சத்தம் கேட்டு வந்த போலீசார் அவரை அங்கிருந்து வெளியேற்றினர்.அவர் அங்கு அரிவாளுடன் வந்ததை பார்த்ததும் வாக்களிக்க வந்தவர்கள் பயந்து வெளியே தெரித்தோடினர்.இந்த தகவல் அறிந்து வந்த சப் கலெக்டர் ஆனந்மோகன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.குடிபோதையில் இயந்திரத்தை உடைத்த ஆனந்தை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து மற்றொரு இயந்திரத்தில் வாக்கு பதிவு நடந்தது.இந்த சம்பவம் குறித்து சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.