இன்று முதல் தொடங்குகிறது பாலிடெக்னிக் மாணவர்களின் இணையவழிக் கல்வி

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் பொறியியல் கல்விக்கு இணையாக பாலிடெக்னிக் கல்லூரிகள் வ் இன்று முதல் இணையவழி வகுப்புகளை தொடங்க உள்ளனர்.

ஏற்கனவே பள்ளிக்கல்வி கல்லூரிகளில் இணையம் வழியாக பாடங்களை எடுக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று முதல் இணைய வழிக் கல்வி தொடங்க இருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் வருடங்களில் முதல் பருவம் பாடங்களை இணைய வழியாக நடத்த தொடங்க வேண்டுமென்றும் ,அதனை தலைமையாசிரியர் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களை கல்லூரிக்கு அழைக்க கூடாது என்று தோவு வாரியம் கூறியுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கு இணைய தளத்தில் புதிதாக பாட திட்டங்களை பதிவேற்றம் செய்துள்ளதாகவும்,ஸ்வயம் என் பி டி எல் போன்ற இணைய வழிக் கல்வியையும் மேற்கொள்ளலாம் என்றும் கல்லூரி சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.