தகுதியற்ற ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா பதக்கமா! கடும் எதிர்ப்பு தெரிவித்த பொண்.மாணிக்கவேல்.

Photo of author

By Parthipan K

தகுதியற்ற ஏடிஎஸ்பி இளங்கோவுக்கு அண்ணா பதக்கம் மா! கடும் எதிர்ப்பு தெரிவித்த பொண்.மாணிக்கவேல்.

சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு பிரிவில் ஏடிஎஸ்பி யாக இருந்த இளங்கோ அவர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவர் திரு.பொன்மாணிக்கவேல் தமிழக தலைமை செயலாளர் சண்முகநாதன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிலை கடத்தல் பிரிவில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் பணியை சரிவர செய்யாமல் இருந்த இளங்கோ அவர்களுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழர்களின் கோயில்களுக்கு சொந்தமான பழங்கால சிலைகளை தாய் தமிழகத்திற்கு கொண்டு வந்து சிறப்பு சேர்த்த பொன்மாணிக்கவேல் தலைமையிலான புலனாய்வுக் குழுவில் உள்ள சிறந்த அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் வழங்காமல், தகுதியற்றவர்களுக்கு விருதுகள் தர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: நடராஜர் சிலை, ராஜராஜ சோழன் சிலை போன்ற பல கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த தொன்மையான சிலைகளை மிக சிறப்பாக செயல்பட்டு மீட்ட அதிகாரிகள் குழுவில் இருக்கும் போது, 2017 ஆம் ஆண்டு இறுதியில் சிறப்பு புலனாய்வு பிரிவில் நியமிக்கப்பட்ட இளங்கோ அவர்கள் சரிவர பணியில் ஈடுபடவில்லை எனவும்
அவருக்கு விருது வழங்குவதை நான் எதிர்க்கவில்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் இருக்கும்போது இளங்கோ அவர்களுக்கு வழங்குவதை தான் நான் எதிர்க்கிறேன் என்று விளக்கமளித்துள்ளார்.

சிலை கடத்தல் பிரிவில் சிறப்பாக செயல்படுவதற்கு தமிழக அரசு எவ்வித பாராட்டையும் ஆதரவையும் தரவில்லை என பொன்மணிக்கவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு தற்போதைய தமிழக தலைமை டிஜிபி திரிபாதி அவர்களுக்கும் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 13 பேர் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தனர். அந்த 13 பேரில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி இளங்கோவும் ஒருவர்.
தற்போது கடலோர காவல் பிரிவில் ஏடிஎஸ்பி ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்