பொங்கல் பரிசு.. தமிழக அரசின் விளக்கம்!! 1 வாரம் கழித்து தான் தீர்ப்பு!!
வருடம் தோறும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு புதிய வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி வருவதுடன் ரூ 500 முதல் 1000 வரை ரொக்க பணத்தையும் கொடுத்து வந்தது.
ஆனால் சென்ற முறை மக்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாமல் பரிசு தொகப்பு மட்டுமே கொடுக்கப்பட்ட நிலையில் இம்முறையாவது பணம் கொடுக்கப்படுமா என்று மக்கள் மனதில் பெரும் கேள்வி உள்ளது.
அந்த வகையில் சென்ற முறை கொடுத்த 21 பொருட்கள் அடங்கிய மல்லிகை பொருட்களை தரமற்ற இருப்பதாக பல புகார்கள் வந்ததையடுத்து தஞ்சாவூரை சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார்.
அதில், நெசவாளர்களின் வளர்ச்சிக்காக எவ்வாறு தமிழக அரசு பொங்கல் திருநாள் விழாவை முன்னிட்டு அவர்களிடம் இருந்து வேஷ்டி சேலை வாங்குகிறதோ அதேபோல வெள்ளம் ஏலக்காய் போன்ற பொருட்களை வெளி மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யாமல் நம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழக அரசு சார்பில் வாதாடிய நீதிபதி, இது தமிழக அரசின் கொள்கை சட்டென்று இதில் மாற்றம் செய்ய இயலாது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இவர் கூறியதை பதில் மனுவாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்து ஒரு வாரம் கழித்து வழக்கு விசாரணைக்கு வரும் என்று உத்தரவிட்டுள்ளார்.