tamil nadu government: பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2000 வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகள் வாயிலாக ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைப்பதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்டப் பொருட்கள் வழங்கப்படும். மேலும், வேட்டி, புடவைகள் வழங்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பொங்கல் விழாவிற்காக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் தற்போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை யுடன் சேர்த்து பொங்கல் பரிசு தொகை ரூபாய் ஆயிரம், ஆக மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு விரைவில் டோக்கன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்பினை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது தமிழக அரசு.