“பொங்கல் பரிசு+மகளிர் உரிமைத்தொகை” ரெட்டிப்பு மகிழ்ச்சி.. மார்ச் மாதம் வெளிவரப்போகும் சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

மகளிர் உரிமை தொகையானது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு கோடியை 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர், ஆனால் அவர்களுள் தற்பொழுது ஒரு கோடியே 16 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வருகின்றனர்.

இந்த மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் அரசு வெளியிட்டுள்ள விதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஆக இருக்க வேண்டும். அந்த விதிகள் ஆவது:

1. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
2. 10 ஏக்கருக்குள் புன்செய் நிலங்களும்,5 ஏக்கருக்குள் நன்செய் நிலங்களும் இருக்க வேண்டும்.
3. வீட்டு மின்சார உபயோகம் ஆண்டுக்கு 3600 யூனிட்டுக்கு மேல் இருக்கக் கூடாது.
4. அரசிற்கு வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது.
5. சொந்த கடை, கார், ஜீப், லாரி போன்ற கனரக வாகனங்கள் வைத்திருக்கக் கூடாது.
6. இவற்றிற்கு ஆதாரமாக வருமானச் சான்றிதழை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

போன்ற விதிகளுக்கு உட்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த அனைத்து விதிகளுக்கும் உட்பட்டும் பல குடும்ப தலைவிகளுக்கு இந்த உதவித்தொகை வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டை போக்கும் விதமாகவும், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படாதவை ஈடு செய்யும் வகையிலும் நிராகரிக்கப்பட்ட மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் என அனைவரும் மீண்டும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

தற்போது புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பித்த அடுத்த மூன்று மாதங்களுக்குள் உதவித்தொகை கிடைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 1 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளன்று மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.