திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

Photo of author

By Parthipan K

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால்தான், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் திமுகவினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை பரப்பி வருவதாக அக்கட்சியினர் பரவலாகப் பேசி வருகின்றனர்,

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விக்கிரவாண்டி பேரூராட்சியை சார்ந்த ராஜா என்பவர் அமைப்பு செயலாளராக இருந்தார் அவர் இத்தேர்தலில் பாமகவிற்கு சார்பில் வேட்புமனு செய்கிறேன் என்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திமுகவின் தூண்டுதலில் பெயரில் தான் செயல்பட்டதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர்,

பாமக தலைவர் ஜி.கே.மணி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என விளக்கம் கொடுத்தார். இது ஒருபுறமிருக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்களை உற்சாக படுத்தும் நோக்கில் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் தேமுதிக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பெருமையாக பேசி அக்கட்சியினரை பெருமைப்படுத்தி பேசினார். இதனால் சுறுசுறுப்பாக அக்கட்சியினர் அதிமுகவிற்கு ஆதரவாக ஓட்டுகளை சேகரித்து வருகின்றனர்.

முக்கியமாக, திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடிக்கு எதிராக கண்டன போஸ்டர்களை வன்னியர்கள் ஒட்டியுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள வாசகம் வன்னியர்களின் உணர்ச்சியை தூண்டும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.

பொன்முடியின் இல்லத்தில் அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளருமான புகழேந்தி அவர்கள் பொன்முடி முன்னால் தரையில் அமர்ந்து கொண்டு இருப்பதுபோல் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளர் அமரக்கூட கூட நாற்காலி போடாமல் தரையில் அமர வைத்து அவமானப்படுத்தியதாகவே அனைவரும் கருதுகின்ற வகையில் அப்புகைப்படம் இருக்கிறது.

அவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கொந்தளிப்பில் உள்ளனர்,

வீதி எங்கும் “யார் உழைத்தது! யார் பிழைப்பது!” போஸ்டர்களை ஒட்டி கடுமையான கண்டனத்தை பொன்முடிக்கு எதிராக தெரிவித்துள்ளனர், அதில் இடம் பெற்றுள்ள வாசகம் என்னவென்றால்

*திமுகவில் உழைக்கும் சமுதாயம் ஒன்று பிறக்கும் சமுதாயம் ஒன்று இதில் யார் வைத்தது யார் பிழைத்தது மக்கள் பார்வைக்கே!

*விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இதில் ஒருவர் கூட வன்னியர் இல்லை உழைத்தவர்கள் கீழேயும் பிழைத்தவர்கள் மேலேயும் இருக்க துரோகிகள் பட்டம் வேறு.

*வன்னியர்கள் துரோகம் செய்ய துணிந்து இருந்தால் நீங்கள் எவரும் எம்பி ஆகி இருக்க மாட்டீர்கள் எம்டி ஆகி இருப்பீர்கள்.

*அன்று ஒரு வன்னியன் உன் தலைமையிடம் தலைவணங்கி நடந்திருந்தால் இன்று விழுப்புரம் மாவட்டத்தின் திமுக அந்த வன்னியனின் தலைமையின் கீழ்தான் இங்கு இருக்கும்.

*சூரியனால் வன்னியர் சமுதாயம் வாழவில்லை உங்கள் சமூகம் மட்டுமே வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.

*சூரியனைக் கொடுத்த சமுதாயம் அந்த சின்னத்தில் போட்டியிட இன்று எவரையோ எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறது.

“இதுதான் இன்றைய வன்னியர்களின் நிலை” என்று சுயமரியாதை இயக்கத்தில் சுயமரியாதையை இழந்து நிற்கும் வன்னியர்கள், காகுப்பம், விழுப்புரம் மாவட்டம்.

என்று பொன்முடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர் பொன்முடி உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பமாட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட வன்னியர்கள் பெரும்பான்மை சமுதாய இருப்பதனால்தான் புகழேந்திக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், வன்னியர்களுக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கொடுப்பதற்கு பதிலாக ஒன்றிய பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து முக்கியத்துவம் இல்லாத பதவியை தான் வன்னியர்களுக்கு அலங்கரிப்பார். அவர் சார்ந்த உடையார் சமுதாயத்திற்கு மட்டும் ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்ப்பார், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் உடையார் சமுதாயமாக இருந்தால் அவர்களின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருக்கும்போது உறுதுணையாக இருந்தார் என்பது உறுதியாக கூறமுடியும்.

விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த திமுகவில் 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படவில்லை. பொன்முடி, மஸ்தான், அங்கையற்கண்ணி இவர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை.

பெரும்பான்மை சமுதாயமாக இருக்கக்கூடிய வன்னியர்களை துளியளவும் கண்டு கொள்ளாமல் தன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு சில நிர்வாகிகளுக்கு மட்டும் பெயரளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் செயலளவில் புண்ணியம் இல்லாத பதவியும் கொடுத்து வருகிறார். மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைகுரிய தளபதி என்பதாலும் மேலும் வன்னியர்களின் எதிர்ப்பு ஆயுதத்தை ஸ்டாலினும் கையாள்வதால் இந்த நிலைமை மாறுவது மிகக் கடினம்.

இதன் காரணமாகவே வன்னியர்கள் பொன்முடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் அம்மாவட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் வன்னியர்களை அரவணைத்து செல்வதால் ஜாதி ரீதியான ஓட்டுகள் அதிமுகவிற்கு எளிதாக கிடைக்கும். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியும் துணை நிற்பதால் தேர்தலில் பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பு அரசியலை வெளி உலகிற்கு தெளிவாக காட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.