பொன்னியின் செல்வன் பாகம் 2! படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட்!

0
316
ponniyan-selvan-part-2-new-update-released-by-the-film-crew
ponniyan-selvan-part-2-new-update-released-by-the-film-crew

பொன்னியின் செல்வன் பாகம் 2! படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட்!

இயக்குனர் மணிரத்தினம் கடந்த ஆண்டு இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படமானது தீபாவளி பண்டிகையை தொடர்ந்தும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்கில் ஓடி வந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் தற்போது வரை எந்த ஒரு படமும் வசூல் செய்யாத சாதனையை பெற்றது. மேலும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.பொன்னியின் செல்வன் திரைப்படமானது 12 நாட்களில் 400 கோடி வசூலை தாண்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. மேலும் பொன்னியின் செல்வன் பாகம் 2 இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பில் வரும் ஏப்ரல் 5 ஆம்  தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தில்  நடித்துள்ள முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் உலக அளவில் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என கூறப்படுகிறது.

Previous articleஇந்த தேர்வு வேண்டாம்! மறு தேர்வு வேண்டும் வலியுறுத்திய ஈபிஎஸ்! 
Next articleசூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி!