பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்ற வில்லை என்பது உண்மை.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கும் மேல் வாசல் செய்துள்ளது. விக்ரம் திரைப்படம் 190 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது அந்த படத்தின் சாதனையை முறியடித்தது இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, ஜெயராம் என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷன் பணிகள் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. எங்கு எப்போது நடைபெற என்பதை படக் குழுவினர் அறிவிப்பார்கள் அதனால் பொன்னியின் செல்வன் இரண்டிலிருந்து வெளிவந்த அகநக பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மீதமுள்ள இரு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாம். 3.24 நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ட்ரெய்லர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ட்ரைலரின் நீளம் 3.24 நிமிடங்கள் என்பதால் ரசிகர்கள் சற்று பெருசாக உள்ளதே எனக் கூறி வருகின்றார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் 1 பாடத்தின் ட்ரைலர் கூட அதே நீளம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.