‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது ? வெளியான சூப்பர் அப்டேட் !

Photo of author

By Savitha

சோழர்களின் பெருமையை எடுத்துரைத்து பலரையும் கட்டிப்போட்டு கல்கியின் கைவண்ணத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க வேண்டும் என்கிற கனவை நனவாக்கி காட்டியவர் இயக்குனர் மணிரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படித்தவர்கள் மட்டுமல்லாது நாவலை படிக்காதவர்கள் கூட இந்த படத்திற்காக தவம் கிடந்தனர். இந்த புனையப்பட்ட வரலாற்று படமானது இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது, பல ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்த படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்தது.Ponniyin Selvan 1' OTT release date is here! | Tamil Movie News - Times of  India

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகிவிட்ட நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை காண மக்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர். இதன் இரண்டாம் பாகத்தில் பொன்னியின் செல்வர் மீண்டு வருவதை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன்-2 2023ம் ஆண்டில் கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் வெளியிடப்படும் என்று ஏற்கனவே இயக்குனர் மணிரத்தினம் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதியினை படக்குழு அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் தயாரிப்பு குழுவான லைகா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதன்படி சோழர்கள் மீண்டும் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி கம்பேக் கொடுக்க போகிறார்கள்.