2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்!

0
298

2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்க வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் 80 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் 6 நாட்களில் 300 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது.

ஆனால் வெளிநாடுகளில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வசூலைப் பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்கா பத்தே நாட்களில் 5 மில்லியன் டாலர் வசூலை தாண்டியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 2.0 மட்டுமே 5 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது. ஆனால் அதை 10 நாட்களில் பொன்னியின் செல்வன் முறியடித்து முன்னேறிக் கொண்டு இருக்கிறது. தீபாவளி வரை பெரும்பாலான திரைகளில் பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் ஓடும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleநடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!
Next articleமாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்! இன்று இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here