பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட தங்க நகைகள் ஏலம்
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகள் அனைத்தும் உண்மையான தங்க நகைகள் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
இந்த படத்துக்காக சோழர் கால ராஜா ராணிக்களின் தோற்றத்தை மீண்டும் கொண்டுவர அவர்கள் அணியும் நகைகள் அனைத்தையும் உண்மையான தங்க நகைகளாக பயன்படுத்தினர். இது சம்மந்தமாக படக்குழுவினரே தெரிவித்தனர். இந்த கிலோ கணக்கிலான நகைகளை பிரபல நகை நிறுவனம் ஒன்று ஸ்பான்ஸர் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது அந்த நகைகளை பிரபல நிறுவனம் ஏலத்தில் விட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஹாலிவுட்டில் இதுபோல பிரபல நடிகர்கள் படங்களில் பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் விடுவதும், அது ரசிகர்களால் அதிக விலை கொடுத்து வாங்குவதும் வழக்கமானதுதான். அந்த ட்ரண்ட்டை இப்போது இந்தியாவிலும் பொன்னியின் செல்வன் மூலமாக கொண்டுவர உள்ளனர்.