பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

Photo of author

By Vinoth

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

Vinoth

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி இதுதான்… வெளியான தகவல்!

பொன்னியின் செல்வன் திரைபடத்தின் முதல் பாகம் சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் வெளியாகி வெற்றிகரமாக முதல் வார இறுதியைக் கடந்துள்ளது. இந்நிலையில் இந்த 6 நாட்களில் 300 கோடி ரூபாயை தாண்டி உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது பொன்னியின் செல்வன். தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரியளவில் வரவேற்பு இல்லை என்று சொல்லப்படும் நிலையில் இந்த வசூல் தொகை சற்று ஆச்சர்யமளிப்பதாகவும் உள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் வசூலை எட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. இந்நிலையில் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்காக வேலைகளை முடுக்கிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.