ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்!

Photo of author

By Vinoth

ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்!

Vinoth

ஏமாற்றிய பிரின்ஸ்…. பொன்னியின் செல்வனுக்கு மீண்டும் படையெடுக்கும் ரசிகர்கள்!

தீபாவளிப் பண்டிகை முடிந்துள்ள நிலையில் இப்போதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்துள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் சாதனைப் படைத்தது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த மைல்கல் சாதனையை எட்டிய ஒரே தமிழ்ப் படம் பொன்னியின் செல்வன்தான் என்று சொல்லப்படுகிறது.

அதே போல உலகளவில் 450 கோடி ரூபாயைத் தாண்டி இந்த படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு பிரின்ஸ் , சர்தார் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. இதனால் இந்த படத்துக்கு திரையரங்குகள் குறைக்கப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் மல்டிப்ளக்ஸ்களில் மட்டும் ஓடியது.

ஆனால் தீபாவளிக்கு வெளியான இரண்டு படங்களும் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இந்நிலையில் இப்பொழுது பொன்னியின் செல்வன் படத்துக்கு மீண்டும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் இப்போதும் உற்சாகமாக ரசிகர்கள் இந்த படத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளிப் படங்களில் சர்தார் கொஞ்சம் ரசிகர்களை திருப்தி படுத்தியது. ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரின்ஸ் திரைப்படம் முதல் நாள் முதலே ரசிர்களைக் கவரவில்லை. இதனால் படிப்படியாக அந்த படத்துக்கு காட்சிகளின் எண்ணிக்கைக் குறைக்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த படம் மூலமாக விநியோகஸ்தருக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.