தளபதி 67 படத்தில் இணைந்த இன்ஸ்டாகிராம் புகழ் நடிகை… வைரல் ட்வீட்!
நடிகை பூனம் பாஜ்வா சமீபகாலமாக தமிழில் எந்த படமும் இல்லாமல் இருந்து வந்தார்.
வாரிசு படத்தின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை விட இப்போதே தளபதி 67 படத்தின் மீதுதான் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. தளபதி 67 திரைப்படத்தை மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களின் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
இந்த படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.
இந்த படம் மிகப் பிரம்மாண்டமாக பன்மொழி பட நடிகர்கள் நடிக்க உள்ளதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் சஞ்சய் தத், நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் திரிஷா கதாநாயகி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தில் நடிகை பூனம் பாஜ்வா ஒரு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பூனம் பாஜ்வா “இயக்குனர் லோகேஷ் மற்றும் விஜய் ஆகியோருக்கு நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார். சில ஆண்டுகளாக படமே இல்லாமல் இருந்த பூனம் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.