நாகர்கோயிலில் உள்ள அரசு நியாயவிலைக் கிடங்குகளில் உள்ள அரிசி மூட்டைகளில் ஒருசில மூட்டைகளில் தரமற்ற அரிசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதனை நேரில் சென்று தகவல் தொழில்நுட்பத்துறை மனோ தங்கராஜ் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்.
தரமான அரிசியை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அரசு நுகர்வோர் வாணிப கழக ஆய்வு செய்ததில் அவர் இத்தகவலை கூறினார்.
நேரில் சென்று ஆய்வு செய்த மனோ தங்கராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கன்னியாகுமரியில் உள்ள நாகர்கோயில் உள்ள அரசு நியாயவிலைக் கடை கிடங்குகளில் உள்ள அரிசி தரமற்றதாக இருப்பது உண்மைதான். இது முந்தைய அரசு கொள்முதல் செய்த அரிசி. குறைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். முயன்ற அளவு நல்ல அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது கூட அரசோடு பேசி அமைச்சர்களுடன் பேசி ஏற்கனவே தமிழ்நாடு அரசால் விநியோகிக்கப்பட்ட அந்த அரிசியில் வந்து அதன் தரம் கம்மியாக உள்ளது. அதை மாற்றி கொடுப்பதற்கான முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். என அமைச்சர் கூறினார்