தலைவி படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை: பெரும் பரபரப்பு

0
168

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வருகின்றனர்

இதனை அடுத்து இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்திருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் இந்த படத்தில் இருந்து திடீரென விலகி விட்டதாகவும் விலகியதற்கான காரணத்தை கூற மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது

பிரியாமணி இந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடிகை பூர்ணா இந்த படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடைய கேரக்டரின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்ததாகவும் அவர் இந்த கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருப்பதாக இயக்குனர் விஜய் உள்பட பலரும் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

ஜூன் 26ஆம் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஅரசுப் பணிக்காக காத்திருப்பவரா நீங்கள்? விண்ணப்பிக்க தாயாராகுங்கள்
Next articleஒரு வயது குழந்தையை தூக்கில் போட்ட தாய்! கணவனுடன் நடந்த சண்டையால் ஏற்பட்ட கொடூர சம்பவம்..!!