பாப்கார்ன் சிக்கன் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.எலும்பு இல்லாத கோழி – 300 கிராம் (கடி அளவு வெட்டவும்)
2.உப்பு – 1 தேக்கரண்டி
3.காஷ்மீர் மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
4.மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
5.ஆர்கனோ – 1 தேக்கரண்டி
6.இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
7.யோகார்ட் / தயிர் – 1 & 1/2 டீஸ்பூன்
மசாலா கலவைக்கு
1.காஷ்மீர் மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
2.உப்பு
3.ஆர்கனோ – 1/2 தேக்கரண்டி
4.மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி
5.பூண்டு தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் எலும்பில்லாத கோழி எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
1. கோழி துண்டுகளில் உப்பு, காஷ்மீர் மிளகாய் தூள், மிளகு தூள், ஆர்கனோ, இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கோழித் துண்டுகளை மைதா மாவில் பிரட்டி எடுக்கவும்.
3. பின் தயிரில் நனைத்து எடுக்கவும்.
4. பின் ஓட்ஸில் பிரட்டி எடுக்கவும்.
5. அதை எண்ணெயில் போட்டு நன்கு வறுத்து எடுக்கவும்.
6. பின் அதன் மேல் செய்து வைத்த மசாலா பொடியை மேலே தூவி பரிமாறவும்.
பாப்கார்ன் சிக்கன் தயார்!