சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்!

Photo of author

By Hasini

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுகளை வழங்கும் பிரபல நடிகரின் மக்கள் இயக்கம்!

தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதுவும் குறிப்பாக சென்னையில் அனைத்து இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் சென்னையில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ராட்சஸ மோட்டார் கொண்டு நீரை வெளியேற்றி வந்தாலும், மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக நீர் தேங்கிய வண்ணமே உள்ளது. எனவே அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் உணவுகள் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக கொரோனா  நேரத்தில் கூட தஞ்சாவூரில் விஜய் மக்கள் மன்றத்தினர் விஜய் விலையில்லா உணவகம் என்பதை ஆரம்பித்து ஏழைகளுக்கு மூன்று வேளையும் வயிறார உணவு வழங்கி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சேவையை கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் தொடர்ந்து செய்து வரும் நிலையில் தற்போது, தென் சென்னையிலும் இவர்களின் உணவினை விலையில்லா விருந்தகம் என்பதை ஆரம்பித்து உணவளித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திருச்சி மற்றும் விருதாச்சலத்தில் கூட இதன் கிளைகளை ஆரம்பித்து ஏழைகளுக்கு உணவளிக்க இருப்பதாக விஜய் மக்கள் மன்றத்தினர் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

https://twitter.com/TeamVijayFC/status/1459065629206474752/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1459065629206474752%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F121926%2FVijay-makkal-iyakkam-to-provide-food-to-those-affected-by-the-chennai-rains